என் மலர்
செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பணம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது
உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.8 லட்சத்து 72 ஆயிரம் பறிமுதல்
திண்டுக்கல் அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.8 லட்சத்து 72 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செந்துறை:
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பரிசு பொருட்கள், பண பட்டுவாடா செய்யப்படுகிறதா? என சோதனை செய்து வருகின்றனர். மேலும் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் உள்பட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் அருகே செந்துறை பகுதியில் அதிகாரி சிதம்பரம் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மணக்காட்டூரிலிருந்து நத்தம் வழியாக வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 950 ரூபாய் இருந்தது. அதற்குரிய ஆவணங்கள் இல்லை. பணத்தை கொண்டு வந்த திண்டுக்கல்லை சேர்ந்த பாஸ்கரனிடம் விசாரித்தபோது, அவர், தனியார் பைனான்ஸ் கம்பெனிக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடமில்லை. அப்பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், நத்தம் தேர்தல் அதிகாரி திருமலை மற்றும் உதவி தேர்தல் அதிகாரி விஜயலெட்சுமி ஆகியோ ரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் நத்தம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Next Story