என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் சாத்தூர் தேர்தல் நடத்தும் துணை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பணம் சாத்தூர் தேர்தல் நடத்தும் துணை அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது

    சாத்தூர் அருகே ரூ.3 லட்சம் சிக்கியது

    சாத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது.
    சாத்தூர்:

    சாத்தூர் சட்டமன்ற தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகளின்படி வாகனத்தில் வரம்புக்கு மீறிய பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியான சங்கரமூர்த்தி பட்டி பஸ் நிறுத்தம் அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் ரூ.3 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    உரிய ஆவணம் இன்றி பணம் கொண்டு சென்றவர் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 50) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வாகனத்தை ஓட்டி வந்தவரையும், அவரிடமிருந்த பணத்தையும் சாத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேஷ், ராஜாமணி ஆகியோர் வசம் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


    Next Story
    ×