search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
    X
    நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி

    தலையில் கரகம் வைத்து நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி

    உடையார்பாளையம் அருகே தலையில் கரகம் வைத்து நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவியை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பெரியதிருக்கோணம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன்-மாலா தம்பதியரின் மகள் கிருஷ்ணவேணி (வயது 15). வாய் பேச முடியாத , காது கேளாத மாற்றுத்திறன் மாணவியான இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள காது கேளாதோர் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

    இவர் விவசாயத்தை காக்கவேண்டும், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்க வேண்டும் என வலியுறுத்தி தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி நாற்றுநடும் பணியில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கரகாட்டம் ஆடிக்கொண்டே மாணவி கிருஷ்ணவேணி நாற்று நட்டதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். 

    மாணவியின் தாய் மாலா கூறுகையில், விவசாயத்தை காக்கவும் கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளர்க்கவும் வலியுறுத்தி கிருஷ்ணவேணி நாற்று நடும் பணியை மேற்கொண்டார். மேலும் இந்தியா புக்ஆப் ரெக்கார்டு பெறவும் இந்த முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

    Next Story
    ×