search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்அப்
    X
    வாட்ஸ்அப்

    வீட்டின் மின் மீட்டர் ரீடிங்கை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்- மின்துறை அறிவிப்பு

    கொரோனா ஊரடங்கினால் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மின்துறை கண்காணிப்பு பொறியாளர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா ஊரடங்கினால் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி நேரடி மீட்டர் கணக்கீடு அல்லது மின் நுகர்வோரின் எஸ்.எம்.எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட மீட்டர் கணக்கீட்டின்படி மின் கட்டண பட்டியலை மின்துறை வழங்கலாம்.

    இணையதளம் அல்லது செயலி மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறைகளை மின்துறை செயல்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள், வியாபார உயர், மிக உயர் மின் அழுத்த நுகர்வோரின் மின் கட்டண தேதி 24.3.2020-ல் இருந்து 30.6.2020 வரை உள்ள கட்டண பட்டியலுக்கு நுகர்வோர் விரும்பினால் நிரந்தர கட்டணம் செலுத்த அவகாசம் பெறலாம்.

    தள்ளிவைக்கப்பட்ட கட்டணம் ஜூன் 30-ம் தேதிக்கு மேல் 3 மாதத்திற்குள் செலுத்தப்பட வேண்டும். வீட்டு மின் நுகர்வோர் மீட்டர் ரீடிங் மற்றும் முந்தைய மாத மின் பட்டியல் நகலை 94890 80401 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×