என் மலர்
செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ-மாணவிகள்.
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #PollachiAbuseCase
தூத்துக்குடி:
பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் வ.உ.சி.கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லூரி வாயிலின் முன்பு அமர்ந்து தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர்.
கல்லூரி மாணவ- மாணவிகளின் இந்த திடீர் போராட்டத்தால் தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் நிலவியது. #PollachiAbuseCase

Next Story