search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு- கோவை மாவட்டத்தில் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961வாக்காளர்கள்
    X

    இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு- கோவை மாவட்டத்தில் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961வாக்காளர்கள்

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன் வெளியிட்டார். #FinalVotersList
    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன் வெளியிட்டார்.

    கடந்த 1.9.2018 வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 33 ஆயிரத்து 509 வாக்காளர்கள் இருந்தனர். புதிதாக 70 ஆயிரத்து 175 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். பெயர் நீக்குதல், இறந்தவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் என 41 ஆயிரத்து 723 பேர் நீக்கப்பட்டனர்.

    இன்று வெளியிட்ட இறுதி பட்டியல் படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961 வாக்காளர்கள் உள்ளனர்.

    அவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 17 ஆயிரத்து 683 பேர் ஆவார்கள்.

    பெண்கள் 14 லட்சத்து 43 ஆயிரத்து 967 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 311 பேர். ஆண்களை விட பெண்கள் அதிகம் ஆவார்கள்.

    தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு-

    மேட்டுப்பாளையம்
    ஆண்கள் - 1,34,994
    பெண்கள்- 1,41,457
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 30

    சூலூர்
    ஆண்கள் - 1,43,707
    பெண்கள்- 1,47,711
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 17

    கவுண்டம்பாளயைம்
    ஆண்கள் - 2,10,995
    பெண்கள்- 2,11,117
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 70

    கோவை வடக்கு
    ஆண்கள் - 1,58,538
    பெண்கள்- 1,56,235
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 29

    தொண்டாமுத்தூர்
    ஆண்கள் - 1,50,250
    பெண்கள்- 1,51,343
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 60

    கோவை தெற்கு
    ஆண்கள் - 1,21,028
    பெண்கள்- 1,21,025
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 14

    சிங்காநல்லூர்
    ஆண்கள் - 1,51,533
    பெண்கள்- 1,52,706
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 22

    கிணத்துக்கடவு
    ஆண்கள் - 1,46,586
    பெண்கள்- 1,50,025
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 34

    பொள்ளாச்சி
    ஆண்கள் - 1,04,722
    பெண்கள்- 1,11,193
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 14

    வால்பாறை
    ஆண்கள் - 95,327
    பெண்கள்- 1,01,115
    மூன்றாம் பாலினத்தவர்கள் - 14

    இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அலுவலக பணி நேரங்களில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் சப் -கலெக்டர் கார்மேகம், ஆர்.டி.ஒ. தனலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிக்குமார், மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்தி மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தி.மு.க. சார்பில் கார்த்திக் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ராஜேந்திரன், அருள், சோமு, மூஷா இந்திய கம்யூனிஸ்டு தங்கவேலு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ராமமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் கார்த்திக் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் எம்.எல்.ஏ. கூறும் போது, கோவை மாநகராட்சி பகுதிகளில் குளக்கரை, நீர் நிலை பகுதிகளில் வசித்து வந்தவர்களுக்கு வெள்ளலூர், கீரணத்தம் பகுதிகளில் வீடு ஒதுக்கப்பட்டு அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.

    ஆனால் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் பழைய இடத்தில் தான் உள்ளது. இதனை புதிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. சார்பில் பங்கேற்ற ராஜேந்திரன் கூறும் போது, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். அதற்கான படிவம் வழங்க வேண்டும் என்றார். #FinalVotersList
    Next Story
    ×