search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம்
    X

    நெல்லை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்தம்

    நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #IndianMedicalAssociation #Doctorsstrike

    நெல்லை:

    மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா முழுவதும் இன்று தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ‘ஸ்டிரைக்’ செய்தனர். தமிழகத்திலும் தனியார் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    இதனால் நெல்லை மாவட்டத்தில் புறநகரில் உள்ள 400 ஆஸ்பத்திரிகளிலும், மாநகரில் உள்ள 100 ஆஸ்பத்திரிகளிலும் இன்று டாக்டர்கள் சாதாரண சிகிச்சைகளை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இதனால் அனைத்து தனியார் ஆஸ்பத்திரியிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் பல கிளினிக்குகள் இன்று பகல் மூடப்பட்டு இருந்தது. பிரபல கண் ஆஸ்பத்திரிகளும் இன்று மூடப்பட்டது.

    ஆனால் பெரிய ஆஸ்பத்திரியில் தங்கி உள்ள நோயாளிகளுக்கும், மகப்பேறு சிகிச்சையும், அவசர சிகிச்சையும் பாதிப்பு இல்லாமல் தொடர்ந்து நடந்தது. இன்று இரவு 6 மணிக்கு மேல் சாதாரண சிகிச்சைகள் நடத்தப்படும் என்றும் தனியார் டாக்டர்கள் சங்க நிர்வாகிகளான டாக்டர்கள் ஆதம்அலி, அன்பு ராஜன், பிரேம சந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். #IndianMedicalAssociation  #Doctorsstrike

    Next Story
    ×