search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7-வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு - மதுரையில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு
    X

    7-வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு - மதுரையில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு

    7-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ரூ. 400 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. #LorryStrike
    மதுரை:

    சுங்க கட்டணம், 3-ம் நபர் விபத்து காப்பீட்டு பிரிமியம் உயர்வு போன்றவற்றை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. ஸ்டிரைக் காரணமாக அத்தியாவசியத் தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டத்தில் 4,500 லாரிகள் உள்ளன. இவற்றில் 90 சதவீத லாரிகள் ஓடவில்லை. இதனால் மதுரையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கத்தரிக்காய், வெண்டை, தக்காளி போன்ற நாட்டு காய்கறிகளை அனுப்ப முடியவில்லை.

    வேன் மற்றும் சரக்கு ஆட்டோக்களில் மதுரையில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட், விளக்குத்தூண் மார்க்கெட், தெற்குவாசல், சுப்பிர மணியபுரம் மார்க்கெட்டுகளுக்கு நாட்டு காய்கறிகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால் அவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இன்று கத்தரிக்காய் 1 கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையானது.

    கர்நாடகா, ஆந்திராவில் இருந்து மதுரையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு மிளகாய் அதிகம் விற்பனைக்கு வரும். அவற்றின் வரத்து குறைந்து விட்டதால் மதுரை மார்க்கெட்டுகளில் இன்று மிளகாய் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையானது.

    சேலம், நாமக்கல்லில் இருந்து முட்டை வரத்தும் குறைந்து விட்டதால் 4 ரூபாய் 80 காசுக்கு விற்கப்பட்ட முட்டை இன்று 30 காசு உயர்ந்து ரூ. 5.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நீடித்தால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். 7-வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் மதுரை மாவட்டத்தில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களை பாதிக்கிற வகையில் உள்ள லாரிகள் வேலை நிறுத்தத்தை உடனே முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #LorryStrike


    Next Story
    ×