search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் நிலநடுக்கம்- பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    X

    சேலத்தில் நிலநடுக்கம்- பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

    இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவலுக்கு 1077என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SalemEarthquake #SalemCollector
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் இன்று ஓமலூர், காடையாம் பட்டி, சேலம் உள்ளிட்ட வட்டங்களில் 7.47 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

    இதுபோன்ற நிலநடுக்கம் உணரப்படும் நேரங்களில் பொதுமக்கள் பதற்றமின்றி இருக்கும்படியும், ஜன்னல், கண்ணாடி, கதவுகள், அலமாரிகள் உள்ளிட்டவற்றின் அருகில் நிற்க வேண்டாம் என்றும் மின்தூக்கியை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் பாலங்கள், உயர் மின் அழுத்தம் கம்பிகள், விளம்பர பலகைகள் அருகில் நிற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் நெருக்கமான கட்டங்களை தவிர்த்து, வெட்டவெளியில் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-யை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார். #SalemEarthquake #SalemCollector
    Next Story
    ×