என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும், காரையும் படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும், காரையும் படத்தில் காணலாம்.

    புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் கடத்தப்பட்ட 768 மதுப்பாட்டில்கள் பறிமுதல்- டிரைவர் கைது

    புதுவையில் இருந்து சென்னைக்க இன்று அதிகாலை காரில் கடத்தப்பட்ட 768 மதுப்பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைதானார்.
    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் வழியாக வெளிமாவட்டங்களுக்கு மதுபாட்டில்கள் கார் மற்றும் வேன்களில் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனைசாவடி அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட அணிச்சக்குப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் இன்று அதிகாலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு வெங்கடேசன், போலீஸ்காரர் சசிக்குமார் ஆகியோர் வாகன சோதனை செய்தனர்.

    அப்போது புதுவையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரின் உள்ளே அட்டைபெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    அதனைபிரித்து பார்த்தபோது 768 மது பாட்டில்கள் இருந்தன. காரில் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த சபாபதி(வயது 35 என்பது தெரியவந்தது. இவர் மதுபாட்டில்களை புதுவையில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சபாபதியை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் காரையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். #Tamilnews
    Next Story
    ×