search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீர்த்தனா ரவி
    X
    கீர்த்தனா ரவி

    ஐ.ஏ.எஸ். ஆவதே எனது விருப்பம் - என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த கோவை மாணவி பேட்டி

    என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளேன். எனது விருப்பம் ஐ.ஏ.எஸ். ஆவதே என்று கோவை மாணவி கீர்த்தனா ரவி கூறினார். #TNEA2018 #TNEARankList #TNEACutOff
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி அழகேசன் ரோட்டை சேர்ந்தவர் ரவி. என்ஜினீயர். இவரது மனைவி பாலம்பிகா. இவரது மகள் கீர்த்தனா ரவி (வயது 19). இவர் இன்று வெளியான என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நான் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பி.எஸ்.எஸ். குருகுலம் பள்ளியில் கடந்த வருடம் பிளஸ்-2 படித்து முடித்தேன். அதன் பின்னர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுழைவு தேர்வில் தமிழகத்தில் 2-ம் இடம் பிடித்தேன். அங்கு படிக்க முடியாமல் போனதால் டெல்லியில் உள்ள புனித ஸ்டீபன் கல்லூரியில் பி.எஸ்.சி. சேர்ந்தேன். அங்கு படிக்க விருப்பம் இல்லாமல் கோவைக்கு திரும்பினேன். 

    அதன்பின்னர் எனது பெற்றோர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கோரினர். நானும் விண்ணப்பித்தேன். அதன்படி இன்று வெளியான பட்டியலில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனது விருப்பம் ஐ.ஏ.எஸ். ஆவதே.

    தற்போது என்ஜினீயரிங் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளதால் என்ன படிக்க வேண்டும், எந்த கல்லூரியில் சேர வேண்டும் என்பதை எனது பெற்றோரிடம் கலந்து பேசி முடிவு செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNEA2018 #TNEARankList #TNEACutOff


    Next Story
    ×