search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா தேவியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
    X

    நிர்மலா தேவியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை 5-வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #professornirmaladevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.



    நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுகளில் மனுத்தாக்கல் செய்தார். இதுவரை தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

    இந்த நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பேராசிரியர் முருகன் சார்பிலும் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என போலீஸ் தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது.

    இதையடுத்து நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். முருகனின் ஜாமீன் மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. #professornirmaladevi


    Next Story
    ×