என் மலர்

    செய்திகள்

    வருகிற 22-ந் தேதி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்
    X

    வருகிற 22-ந் தேதி ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.12666) வருகிற 22-ந் தேதி மட்டும் கன்னியாகுமரியில் இருந்து காலை 7.50 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.
    மதுரை:

    கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    கிழக்கு கடற்கரை ரெயில்வே மண்டலத்துக்கு உள்பட்ட பாலசா-விசாகப்பட்டினம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.

    இதனால் இந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து, கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.12666) வருகிற 22-ந் தேதி மட்டும் கன்னியாகுமரியில் இருந்து காலை 7.50 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 9.50 மணிக்கு புறப்படும்.

    எனவே இந்த ரெயில் மதுரை ரெயில்நிலையத்துக்கும் தாமதமாக வந்து சேரும்.

    Next Story
    ×