என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு: 1000 லிட்டர் தண்ணீர் ரூ.500-க்கு விற்பனை
    X

    கோத்தகிரியில் குடிநீர் தட்டுப்பாடு: 1000 லிட்டர் தண்ணீர் ரூ.500-க்கு விற்பனை

    கோத்தகிரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் லாரிகளில் வினியோகம் செய்யப்படும் 1000 லிட்டர் தண்ணீர் ரூபாய் 400 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஒரு லிட்டர் தண்ணீர் 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை விலைக்கு வழங்கப்படுகிறது. சரக்கு ஆட்டோக்களில் 500 லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஓட்டல்களுக்கு ரூபாய் 150 எனவும் குடியிருப்புகளுக்கு 200 எனவும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    லாரிகளில் வினியோகம் செய்யப்படும் 1000 லிட்டர் தண்ணீர் 400 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வறட்சியால் ஏற்பட்ட தட்டுப்பாட்டால் பொதுமக்களும் வேறு வழியின்றி விலை கொடுத்து தண்ணீரை வாங்கி செல்கின்றனர்.

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பலவிதமான நடவடிக்கைகள் அரசு எடுத்து வந்தாலும் எந்த பணியும் நிறைவடையாத காரணத்தினால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    எனவே ஈளாடா தடுப்பணையை தூர்வாரும் பணி மற்றும் அளக்கரை கூட்டு குடிநீர் திட்டப்பணி மற்றும் ஆழ்துளை கிணறுகளில் மோட்டார் பொருத்தும் பணி ஆகியவற்றை விரைவில் முடித்து குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பதே கோத்தகிரி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
    Next Story
    ×