என் மலர்

  செய்திகள்

  3 பிரிவாக செயல்படும் புதுவை அ.தி.மு.க.
  X

  3 பிரிவாக செயல்படும் புதுவை அ.தி.மு.க.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதலமைச்சர், பொதுச்செயலாளர் இடையே ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக புதுவை அ.தி.மு.க. 3 பிரிவாக செயல்படுகிறது. இதனால் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
  புதுச்சேரி:

  தமிழக அ.தி.மு.க. சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என 2 ஆக பிரிந்துள்ளது. கட்சியில் ஒவ்வொரு மட்டத்திலும் இரு அணியினருக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

  ஆனால் புதுவை மாநிலத்தை பொறுத்தவரை அ.தி.மு.க.வினர் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

  புதுவை மாநில முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தார். தற்போது அவரது தலைமையில் பன்னீர்செல்வம் அணி தனியாக செயல்பட்டு வருகிறது.

  மாநில அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளார். நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அவருக்கு பின்னால் உள்ளனர். இதனால் புருஷோத்தமன் தலைமையில் சசிகலா அணி இயங்கி வருகிறது.

  புதுவையில் அ.தி.மு.க.வுக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சட்டமன்ற அ.தி.மு.க.வின் தலைவராக அன்பழகன் இருந்து வருகிறார். இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் தனியாக இயங்கி வருகிறார்கள். அவர்கள் 2 நாட்களுக்கு முன்பு தற்போது உள்ள பிரச்சினை சம்மந்தமாக ஆலோசனை நடத்தினார்கள்.

  இதில் கட்சியின நலன் கருதி தொண்டர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவை எடுக்கப்போவதாக அறிவித்தனர். தற்போது அவர்கள் எந்த அணியிலும் சேராமல் நடுநிலை வகித்து வருகின்றனர்.

  தமிழ்நாட்டில் கட்சி யாரிடம் செல்லப்போகிறது என்று தெரியவில்லை. அங்கு ஒரு முடிவு வந்ததற்கு பிறகு முடிவு எடுக்கலாம் என இவர்கள் காத்திருக்கிறார்கள். குறிப்பாக யார் கை ஓங்குகிறதோ அந்த அணிக்கு செல்வது என்ற முடிவில் இருக்கின்றனர்.

  புதுவை மாநில தலைமையின் கட்டுப்பாட்டில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. அவர்கள் தாங்களாகவே கூடி முடிவு எடுத்து வருகிறார்கள். புதுவை அ.தி.மு.க. 3 அணியாக செயல்படுவதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
  Next Story
  ×