என் மலர்

  செய்திகள்

  அ.தி.மு.க.வில் நடப்பது அதிகார போட்டி: முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பேட்டி
  X

  அ.தி.மு.க.வில் நடப்பது அதிகார போட்டி: முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க.வில் அதிகார போட்டி நடக்கிறது என்று முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறி உள்ளார்.

  திண்டுக்கல்:

  திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு இளைஞர்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது தொடர்கிறது.

  அ.தி.மு.க.வில் தற்போது பதவிக்கான போட்டி நடைபெறுகிறது. அதிகாரத்தை கைப்பற்றவே இரு தரப்பினரும் முயல்கின்றனர். எம்.எல்.ஏ.வை அடைத்து வைத்துள்ளது தவறான நடவடிக்கை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து பதவியில் இருக்கும்போது பேசாத முதல்வர் பன்னீர்செல்வம் தற்போது பேசுகிறார்.

  மத்திய அரசு இதில் அரசியல் ஆதாயம் தேடுகிறது. எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கருத்து கூற மக்களுக்கு உரிமை இல்லை என்று சொல்வது அரசியல் அடிப்படை சட்டத்துக்கு மாறானது. அடிப்படை உரிமைகள் கூட தெரியாமல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பேசுகின்றனர்.

  திண்டுக்கல் மாநகரில் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி எந்த திட்டத்தையும் முன்னெடுக்க வில்லை. திண்டுக்கல் தெற்கு போலீசார் இந்திய ஜனநாயக வாலிபர் சஙக நிர்வாகிகளை காரணமின்றி தாக்கி ஆடைகளை கலைத்து சிறை வைத்தது கண்டிக்கத்தக்கது. போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்துவோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×