என் மலர்

  செய்திகள்

  சசிகலாவுக்கு ஆதரவு அளித்தால் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பக்கம் வரக்கூடாது: வாக்காளர்கள் எதிர்ப்பு
  X

  சசிகலாவுக்கு ஆதரவு அளித்தால் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பக்கம் வரக்கூடாது: வாக்காளர்கள் எதிர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சசிகலாவுக்கு ஆதரவு அளித்தால் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி பக்கம் வரக்கூடாது என்று சமூக வலைதளங்களில் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  திருப்பூர்:

  முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே ஆட்சி அமைப்பதில் போட்டி நிலவி வருகிறது.

  சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வரும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அதேநேரத்தில் பன்னீர் செல்வத்துக்கு வாட்ஸ் மூலம் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவு கரம் நீட்டி வருகிறார்கள்.

  இந்த நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ. சசிகலாவுக்கு பேஸ் புக்கில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

  அதில் ‘அ.தி.மு.க. விசுவாசி நான். இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்கு நான் இருப்பேன். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என பதிவிட்டிருந்தார்.

  இதை பார்த்த வாக்காளர்கள் சமூக வலை தளங்களில் கடும் அதிருப்தி தெரிவித்து வறுத்தெடுத்து வருகிறார்கள்.

  சமூக வலைதளங்களில் தொகுதி மக்கள், ‘‘ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஓட்டு போட்ட மக்கள் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தால் உங்களுக்கு கடைசி தேர்தல், இதுவே. உங்கள் வீட்டு முன் போராட்டம் நடக்கும். தொகுதி மக்களிடம் ஓட்டு கேட்டு இனி வரக்கூடாது’ என பதிவிட்டு இருந்தனர்.

  இதேபோல் காங்கயம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவை தனியரசு எம்.எல்.ஏ.வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

  அதில் காங்கயம் தனியரசு எம்.எல்.ஏ.வுக்கு...

  நாங்கள் ஜெயலலிதாவுக்காக , அவரது ஆட்சிக்காக மட்டுமே உங்களுக்கு வாக்கு அளித்தோம். நீங்கள் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிகிறோம். வாக்களித்த எங்கள் விருப்பத்துக்கு மாறாக ஒருவரை தேர்வு செய்ய நீங்கள் யார்? ஆகவே உங்கள் பதவியை உடனடியாக ராஜினாமா செய்து விடுங்கள். காங்கயம் தொகுதிக்குள் வர வேண்டாம். இப்படிக்கு காங்கயம் தொகுதி வாக்காளர்கள்.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×