என் மலர்

  செய்திகள்

  புதுவையில் சிகிச்சை அளித்த டாக்டருக்கு பன்றி காய்ச்சல் - நாராயணசாமி தகவல்
  X

  புதுவையில் சிகிச்சை அளித்த டாக்டருக்கு பன்றி காய்ச்சல் - நாராயணசாமி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
  புதுச்சேரி:

  புதுவையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

  முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  புதுவையில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜிப்மரிலும், கோரி மேடு மார்பக மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

  அரசின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாயநல மருத்துவமனைகள் ஆகியவற்றிலும் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறியோடு வரும் நோயாளிகளுக்கு ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றை பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளோம். தேவையான மருந்துகளும் அரசிடம் இருப்பில் உள்ளது. பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த சுகாதார குழு அமைக்கப்பட்டுள்ளது.

  சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதுவையில் பன்றிகளை பிடிக்க நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×