என் மலர்

    செய்திகள்

    ஆவின்பால் கலப்பட வழக்கு: ஜனவரி 23-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
    X

    ஆவின்பால் கலப்பட வழக்கு: ஜனவரி 23-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆவின்பால் கலப்பட வழக்கு விசாரணையை நீதிபதி சுபா அன்புமணி ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஊரல் கிராமத்தில் கடந்த 19.8.2014 அன்று இரவு ஆவின் பால் டேங்கர் லாரியில் தண்ணீர் ஊற்றி கலப்படம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக வெள்ளிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்பட 26 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்த வழக்கு நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தொடர்புடைய வைத்தியநாதன் உள்பட 24 பேர் ஆஜரானார்கள். டிரைவர்கள் தினகரன், குமார் ஆகியோர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து வழக்கில் தொடர்புடைய அனைவரும் அடுத்த விசாரணைக்கு ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலைப் பெறவேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி சுபா அன்புமணி விசாரணையை ஜனவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×