என் மலர்

  செய்திகள்

  செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ்- லாரிகள் நிறுத்தம்
  X

  செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ்- லாரிகள் நிறுத்தம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முழு அடைப்பு எதிரொலியால் செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் பஸ் மற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

  செங்கோட்டை:

  மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பிற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

  இந்நிலையில் மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

  நெல்லை மாவட்டத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கேரளாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அவற்றில் காய்கறிகள், பால், அரிசி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடப்பதால் லாரிகள் அனைத்தும் செங்கோட்டை பிரானூர் பார்டரில் நிறுத்தப்பட்டுள்ளன.

  மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பஸ்களும் இயக்கப்படவில்லை. அதே போன்று தமிழக பஸ்களும் அங்கு செல்லவில்லை. இந்த போராட்டத்தால் செங்கோட்டை, ஆலங்குளம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு ஏற்றுமதியாகும் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன.

  Next Story
  ×