search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவைக்கு அதிகமாக பணம் வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது: ராமதாஸ்
    X

    தேவைக்கு அதிகமாக பணம் வருவதால் வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது: ராமதாஸ்

    வங்கிகளில் தேவைக்கும் அதிகமாகவே பணம் இருப்பதால், வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்க கூடாது என ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    பொதுமக்கள் தங்களிடமுள்ள மதிப்பிழந்த ரூ.500, ரூ.1000 தாள்களை வங்கி கணக்கில் செலுத்த தொடங்கியிருப்பதால் வங்கிகளின் பண இருப்பு அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் வரை வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. வங்கிகளில் தேவைக்கும் அதிகமாகவே பணம் இருப்பதால், வங்கிகள் வட்டி விகிதத்தை குறைத்து வருகின்றன.

    வங்கிகள் மட்டுமின்றி, இந்திய ரிசர்வ் வங்கியும் அடுத்த மாதத்தில் கடன் கொள்கையை அறிவிக்கும் போது வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டிக்குறைப்பு தொடர்பான வங்கிகளின் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டால் பொதுமக்களின் வைப்பீடுகளுக்கு வங்கிகள் வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதம் 5 சதவீதம் என்ற அளவுக்கு சுருங்கி விடும். இதனால் பொதுமக்கள், மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வங்கிகளைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி, கடன் பத்திரங்கள் ஆகியவற்றின் மீதான வட்டியும் பெருமளவில் குறைக்கப்படும் வாய்ப்புள்ளது.

    எனவே, ஓய்வூதியமற்ற மூத்த குடிமக்கள், ஏழைக்குடும்பங்கள் உள்ளிட்டோரை சிறப்பு பிரிவினராக அறிவித்து, அவர்களின் வைப்பீடுகளுக்கு மட்டும் இப்போதுள்ள வட்டி விகிதமே தொடருவதை உறுதி செய்ய வேண்டும். அதன்மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×