என் மலர்
செய்திகள்

நெல்லித்தோப்பில் நாளை வாக்குப்பதிவு - தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைப்பெறுகிறது. இதற்காக தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அ.தி.மு.க. சார்பில் ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட 8 பேர் போட்டியிடுகின்றனர். நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்தலுக்காக 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 14,939, பெண் வாக்காளர்கள் 16,418, வெளிநாடு வாழ் இந்தியர் 5, சர்வீஸ் வாக்காளர்கள் 4 என மொத்தம் 31,366 பேர் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை விரிவாக செய்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்து அரசியல் கட்சிகள் முன்னிலையில் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டது.
மீண்டும் எந்திரங்கள் குலுக்கல் முறையில் எந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு எந்த எந்திரம் என தேர்வு செய்யப்பட்டது. பின்னர் இந்த எந்திரங்களில் வாக்காளரின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவை பொருத்தப்பட்டது. பின்னர் அவை தயார் நிலையில் பாரதிதாசன் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
தேர்தலையொட்டி இன்று காலை 10 மணியளவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்போடு வேன்களில் நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வாக்குப்பதிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பயிற்சி பெற்ற 270 வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஓட்டுச்சாவடிக்கு 2 பேர் என 52 தன்னார்வ மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர இணையதளத்தில் வாக்குப்பதிவு விபரங்களை உடனுக்குடன் பதிவு செய்ய 32 மாணவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு 40 நுண் பார்வையாளர்களும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு தேர்தல் துறை மூலம் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலீப் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 28,137 பேருக்கு இந்த பூத்சிலீப் தேர்தல் துறையால் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இந்த பூத் சிலீப்பை காட்டி எளிதில் தங்கள் வாக்குகளை செலுத்தலாம். பூத் சிலீப் கிடைக்கப்பெறாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட தேர்தல் துறை குறிப்பிட்டுள்ள 11 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்காளர்கள் வசதிக்காக பந்தல், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு முழுமையாக பதிவு செய்யப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடிகளுக்கு வெளியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் தங்கள் செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாக்குப்பதிவு செய்யும்போது எடுத்துவரக்கூடாது என்று தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள் அனைத்திலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளையும் நாளை மூடவும் தேர்தல் துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் அமைதியாக நடைபெற துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 264 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். புதுவை போலீசார் 250 பேரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தலையொட்டி மது கடைகளுக்கு 2 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு மீண்டும் மது கடைகள் திறக்கப்படும். மேலும் நெல்லித்தோப்பு தொகுதிக்கான 13 நுழைவாயில்களும் போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மாஜிஸ்திரேட்டு அந்தஸ்துள்ளவர்கள் தலைமையில் 10 ஐ,ஆர்.பி. போலீசார் கொண்ட 5 குழுக்கள் பணியில் உள்ளனர். 25 முக்கிய இடங்களில் ஐ.பி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 2 வீடியோ கண்காணிப்பு குழுக்கள், 13 சுழற்சி முறை கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு நாளை மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது. வரும் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Next Story