என் மலர்
செய்திகள்

105 தமிழக படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
இலங்கை அரசின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 105 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதேபோல் தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் தலைமைச் செயலர் ராமமோகனராவ், மத்திய வெளியுறவுத்துறை செயலருக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தில், இலங்கை வசமுள்ள, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான, 105 படகுகளை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
மேலும் அவர் கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
கடந்த, 2014 முதல், தமிழக மீனவர்களின், 158 படகுகளை, இலங்கை அரசு பறிமுதல் செய்தது. அவற்றை விடுவிக்கும் படி, தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதற்காக, தமிழக சட்ட சபையில், 2014, டிசம்பர் 5-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை நீதிமன்றம் மூலம் படகுகளை விடுவிக்க, தமிழக அரசு முயற்சித்தது.
இதன் தொடர்ச்சியாக, தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் இருந்த, 80 படகுகளை மீட்க, 54 படகுகளில், 355 மீனவர்கள் சென்றனர். அதற்கான செலவை, தமிழக அரசு ஏற்றது.
64 படகுகள் மீட்கப்பட்டன; 16 படகுகள் பழுது பார்க்க முடியாத அளவில் சேதமடைந்திருந்தன. தற்போது இலங்கை வசம், 105 படகுகள் உள்ளன. அந்த படகுகளை இலங்கை அரசு விடுவிக்காததால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த படகுகள் சேதமடையும் முன், விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள், புதிய படகு கட்ட வசதியாக, மத்திய அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

Next Story