என் மலர்

  செய்திகள்

  வேலூர் கோர்ட்டில் ரவுடி ஜானி சரணடைய வந்த போது எடுத்த படம்.
  X
  வேலூர் கோர்ட்டில் ரவுடி ஜானி சரணடைய வந்த போது எடுத்த படம்.

  கரகாட்டக்காரி அக்காள் மகன் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி ஜானி வேலூர் கோர்ட்டில் சரண்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோகனாம்பாளின் அக்காள் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ரவுடி ஜானி வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
  வேலூர்:

  செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புடைய கரகாட்டக்காரி மோகனாம்பாளின் அக்காள் மகன் சரவணன் (வயது 33) ரூ. 3 கோடி பணம் கேட்டு தராததால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

  இது தொடர்பாக காட்பாடி ரவுடி ஜானி உள்ளிட்டோர் மீது வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  இதில் வேலூர் ஓல்டுடவுன் பகுதியை சேர்ந்த அசேன் (30) மற்றும் 17 வயது வாலிபர், சேண்பாக்கம் வேந்தன் தெருவை சேர்ந்த வினோத்குமார் (32), கொணவட்டம் பொன்னியம்மன்நகர் தாமரைக்குளம் தெருவை சேர்ந்த முனீர் (28),

  கொணவட்டம் மதினாநகரை சேர்ந்த பாஷா (30), கொசப்பேட்டை எஸ். எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்த சின்னா என்கிற சந்திரன் (30), சலவன்பேட்டை ஆறுமுக முதலியார் தெருவை சேர்ந்த ரகு என்கிற ரகுபதி (24),

  சலவன்பேட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் (26), தொரப்பாடி பெரியஅல்லாபுரம், ராஜீவ் காந்திநகரை சேர்ந்த மாரி என்கிற கொய்யாக்கா மாரி (26), அப்துல்லாபுரம் குமரன் நகரை சேர்ந்த குமார் (36), வேலூர் எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்த அட்டப்பா என்ற நவீன்குமார் (26), வேலூர் சம்பத்நகரை சேர்ந்த ராமு (24) ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

  ரவுடி ஜானி தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி இருந்தனர்.

  இந்த நிலையில் வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 3-ல் நீதிபதி வெற்றிமணி முன்பு இன்று காலை ஜானி சரண் அடைந்தார். விருதம்பட்டில் நடந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக ஜானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

  அந்த வழக்கு தொடர்பாக ஜானி கோர்ட்டில் சரண் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் சரவணன் கொலை வழக்கு தொடர்பாக ஜானியை காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

  இதற்கிடையே சரவணன் கொலை வழக்கு தொடர்பாக ஜானி கும்பலுடன் தொடர்புடைய 5 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.
  Next Story
  ×