என் மலர்
செய்திகள்

கொடைக்கானலில் ஆசை வார்த்தை கூறி மாணவி பலாத்காரம்: விவசாயி தப்பி ஓட்டம்
கொடைக்கானல்:
கொடைக்கானல் அப்சர் வேட்டரி செல்லபுரத்தை சேர்ந்தவர் அங்காளஈஸ்வரி. இவரது கணவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவரது 2-வது மகள் வத்தலக்குண்டு அருகே உள்ள அறக்கட்டளையில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் ஊருக்கு திரும்பினார். அப்போது முதல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
சம்பவத்தன்று அங்காளஈஸ்வரி வேலைக்கு சென்றார். மற்ற குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டதால் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆறுமுகம் (வயது68) விவசாயி நைசாகஸ் வீட்டுக்குள் புகுந்தார்.
மாணவியிடம் ஆசை வார்த்தை பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மிகவும் சோர்வாக காணப்பட்ட மாணவியிடம் அவரது தாய் ஏன் என்று விசாரித்தார். நடந்த சம்பவத்தை கூறி மாணவி அழுதுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தாய் இது குறித்து கொடைக்கானல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதை கேள்விபட்ட ஆறுமுகம் தப்பி ஓடிவிட்டார். இன்ஸ்பெக்டர் ஜெயராணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.






