என் மலர்
செய்திகள்

பாம்பன் ரெயில் பாலம் அருகே சிக்னல் பழுதால் பயணிகள் ரெயில் நிறுத்தம்
பாம்பன் ரெயில் பாலம் அருகே சிக்னல் பழுதால் 15 நிமிடத்துக்கு மேலாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது.
ராமேசுவரம்:
மதுரையில் இருந்து தினமும் காலை 6.50 மணிக்கு ராமேசுவரத்திற்கு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இன்று காலையும் வழக்கம்போல் பயணிகள் ரெயில் ராமேசுவரத்திற்கு புறப்பட்டது.
10.20 மணி அளவில் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு சென்றது. அங்கிருந்து கடலில் உள்ள ரெயில் பாலத்திற்கு செல்ல சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து 15 நிமிடத்துக்கு மேலாக பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. சிக்னல் பழுதை செய்தபின் ரெயில் புறப்பட்டு சென்றது.
Next Story