என் மலர்
செய்திகள்

ராம்குமார் தற்கொலை தொடர்பாக புழல் சிறையில் மனித உரிமை ஆணையர் விசாரணை
ராம்குமார் தற்கொலை தொடர்பாக சிறைத்துறை தலைவர், மனித உரிமை ஆணையர் ஆகியோர் புழல் சிறையில் விசாரணை நடத்தினர்.
செங்குன்றம்:
ராம்குமார் தற்கொலை தொடர்பாக சிறைத்துறை தலைவர், மனித உரிமை ஆணையர் ஆகியோர் புழல் சிறையில் விசாரணை நடத்தினர்.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார்(வயது24) கடைசி 3 நாட்களாக புழல் சிறையில் உள்ள டிஸ்பென்சரி செல்லில் (மருத்துவ அறை) அடைக்கப்பட்டிருந்தார். அவர் தற்கொலை முயற்சி எதுவும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் சிறை காவலர்கள் 2 பேர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அறையிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு வருவதாக வெளியில் சென்ற ராம்குமார் அங்கிருந்த மின்சார பெட்டியை உடைத்து, வயரை பல்லால் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
ராம்குமார் மரணம் குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என கூறி போராட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை தலைவர் விஜய்குமார், மனித உரிமை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் புழல் சிறையில் நேற்று விசாரணை நடத்தினார்கள். சிறை அதிகாரிகளிடமும், சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவலர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ராம்குமார் அடைக்கப்பட்டு இருந்த அறை

ராம்குமார் உடைத்த மின்சார பெட்டி
ராம்குமார் தங்கியிருந்த அறை, அவர் தற்கொலை செய்துகொள்வதற்காக உடைத்த மின்சார பெட்டி, கடித்த மின்சார வயர் ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் புழல் சிறை வளாகத்தில் பொதுமக்கள் யாரையும் கைதிகளை பார்க்க அனுமதிக்கவில்லை. சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Next Story