என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
  X

  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுந்தரவல்லி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
  திருவள்ளூர்:

  திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு:-

  கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஆண் 1 லட்சத்து 27ஆயிரத்து 310ம், பெண் 1 லட்சத்து 32 ஆயிரத்து 442ம், இதர வாக்காளர்(திருநங்கைகள்) 31 உள்பட மொத்தம் 2 லட்சத்து 59 ஆயிரத்து 783 பேர் உள்ளனர்.

  பொன்னேரி தொகுதியில் ஆண் 1 லட்சத்து 21 ஆயிரத்து 20ம், பெண் 1 லட்சத்து 24 ஆயிரத்து 934ம், இதர வாக்காளர்கள் 60ம் உள்பட மொத்தம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 14 பேர் உள்ளனர்.

  திருத்தணி தொகுதியில் ஆண் 1 லட்சத்து 33 ஆயிரத்து 439ம், பெண் 1 லட்சத்து 38 ஆயிரத்து 237ம் இதர வாக்காளர்கள் 29 உள்பட மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 705 வாக்காளர்கள் உள்ளனர்.

  திருவள்ளுர் தொகுதியில் ஆண் 1 லட்சத்து 25 ஆயிரத்து 967ம், பெண் 1 லட்சத்து 30 ஆயிரத்து 814ம் இதர வாக்காளர்கள் 21 உள்பட மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 802 வாக்காளர்கள் உள்ளனர்.

  பூந்தமல்லி தொகுதியில் ஆண் 1 லட்சத்து 56 ஆயிரத்து 753ம், பெண் 1 லட்சத்து 58 ஆயிரத்து 922ம் இதர வாக்காளர்கள் 48 உள்பட மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரத்து 723 வாக்காளர்கள் உள்ளனர்.

  ஆவடி தொகுதியில் ஆண் 1 லட்சத்து 98 ஆயிரத்து 972ம், பெண் 1 லட்சத்து 97 ஆயிரத்து 877ம், இதர வாக்காளர்கள் 88ம் உள்பட மொத்தம் 3 லட்சத்து 96 ஆயிரத்து 937 வாக்காளர்கள் உள்ளனர்.

  மதுரவாயல் தொகுதியில் ஆண் 2 லட்சத்து 03 ஆயிரத்து 790ம், பெண் 1 லட்சத்து 97ஆயிரத்து 822ம், இதர வாக்காளர்கள் 126 உள்ளிட்ட மொத்தம் 4 லட்சத்து 01 ஆயிரத்து 738 வாக்காளர்கள் உள்ளனர்.

  அம்பத்தூர் தொகுதியில் ஆண், 1 லட்சத்து 80 ஆயிரத்து 480ம், பெண் 1 லட்சத்து 78 ஆயிரத்து 490ம், இதர வாக்காளர்கள் 103ம் உள்பட மொத்தம் 3 லட்சத்து 59 ஆயிரத்து 063 பேர் உள்ளனர்.

  மாதவரம் தொகுதியில் ஆண் 1 லட்சத்து 96 ஆயிரத்து 732ம், பெண், 1 லட்சத்து 95 ஆயிரத்து 955ம் இதர வாக்காளர்கள் 82ம் உள்பட மொத்தம் 3 லட்சத்து 92 ஆயிரத்து 769 வாக்காளர்கள் உள்ளனர்.

  திருவொற்றியூர் தொகுதியில் ஆண் 1 லட்சத்து 40 ஆயிரத்து 322ம், பெண் 1 லட்சத்து 42 ஆயிரத்து 476ம், இதர வாக்காளர்கள் 89ம் உள்ளிட்ட மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 897 பேர் உள்ளனர்.

  திருவள்ளூர் மாவட்டம் முழுவதுமுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் ஆண் 15 லட்சத்து 84 ஆயிரத்து 425ம், பெண் 15 லட்சத்து 97 ஆயிரத்து 959ம், இதர வாக்காளர்கள் 677 உள்பட மொத்தம் 31 லட்சத்து 83 ஆயிரத்து 431 பேர் உள்ளனர்.

  வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை செய்ய விரும்புபவர்கள், உரிய படிவத்தை பூர்த்தி செய்து, 01.09.2016 முதல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், சிறப்பு முகாம் நாட்களான 11.09.2016 மற்றும் 25.9.2016 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்களை அளிக்கலாம்.

  மேலும் 10.09.2016 மற்றும் 24.09.2016 ஆகிய இரு சனிக்கிழமைகளிலும் 526 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வாசிக்கப்படவுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2017 அன்று வெளியிடப்பட உள்ளது.
  Next Story
  ×