என் மலர்
செய்திகள்

சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 18-ந் தேதிக்குள் செலவு கணக்குகளை ஒப்படைக்க உத்தரவு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டசபை தொகுதி வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
ஈரோடு :
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. ம.தி.மு.க., பா.ம.க. கொங்கு நாடு தேசிய கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 122 பேர் போட்டியிட்டனர். இந்த வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்குகளை பார்வையிட மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் நடிகர்–நடிகைகள் பிரசாரம் ஆகிய இடங்களுக்குசென்று தேர்தல் செலவுகளை கண்காணித்தனர்.
மேலும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் செலவு கணக்குகளை மேலிட பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் அனைத்து வேட்பாளர்களும் வருகிற 18–ந்தேதிக்குள் தங்களது தேர்தல் செலவு கணக்குகள் முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Next Story