என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி, கரூர், புதுக்கோட்டையில் திடீர் மழை
    X

    திருச்சி, கரூர், புதுக்கோட்டையில் திடீர் மழை

    திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு மழை பெய்ததன் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    கரூர்:

    திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. 105 டிகிரிக்கு மேல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பகல் நேரங்களில் வெளியில் செல்வதையும் அவர்கள் தவிர்த்து வந்தனர். அதிலும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. பின்னர் இரவு வானில் கருமேகங்கள் திரண்டு மின்னல் வெட்டியது. குளிர்ந்த காற்றும் வீசியது. இதனால் மழை வரும் என மக்கள் எதிர்பார்த்தனர். அதுபோல் இரவு 10 மணி மற்றும் நள்ளிரவில் லேசான தூறலுடன் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந் தனர்.

    இதே போல் கரூர் மற்றும் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு 9 மணி முதல் 11 மணி வரை கன மழை பெய்தது. இதில் அரவக்குறிச்சியில் அதிகபட்சமாக 107 மி.மீ. மழை பெய்துள்ளது. பலத்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், அறந்தாங்கி ஆகிய பகுதிகளிலும் நேற்றிரவு லேசான தூறலுடன் மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியிலும் லேசான மழை பெய்தது.

    Next Story
    ×