என் மலர்
செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவையில் 144 தடை உத்தரவு
சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு புதுவையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி :
சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு புதுவையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாவட்ட துணை தேர்தல் அதிகாரி தில்லைவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் வருகிற 16-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புதுவையில் 144 தடை விதித்து புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் புதுச்சேரி மாவட்டம் முழுவதும் இரவு 11 மணிக்கு மேல் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி வீதிகளில், பொது இடங்களில் மற்றும் பொது வழிகளில் பேசுவதும் மற்றும் கோஷம் எழுப்புதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறினால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக இந்திய தண்டனைச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தடை உத்தரவு புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் முடியும் வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story