என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் இன்று கருணாநிதி - இளங்கோவன் ஒரே மேடையில் பேசுகிறார்கள்
    X

    திருவாரூரில் இன்று கருணாநிதி - இளங்கோவன் ஒரே மேடையில் பேசுகிறார்கள்

    திருவாரூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கருணாநிதியுடன் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொள்கிறார்.
    திருவாரூர்:

    சட்டசபை தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் சென்னையில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    நேற்று அவர் கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். இரவு மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    பின்னர் அவர் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கினார். இன்று அவர் காட்டூரில் உள்ள தனது தாய் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அவர் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இன்று இரவு திருவாரூர் தெற்கு வீதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் பங்கேற்கிறார். இரு தலைவர்களும் ஒரே மேடையில் பேச உள்ளதால் இரு கட்சி தொண்டர்களும் குவிய தொடங்கி உள்ளனர்.
    Next Story
    ×