என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. ஆட்சி வந்ததும் நாகர்கோவில் நகரசபை மாநகராட்சியாக்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி
    X

    தி.மு.க. ஆட்சி வந்ததும் நாகர்கோவில் நகரசபை மாநகராட்சியாக்கப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

    தி.மு.க. ஆட்சி வந்ததும் நாகர்கோவில் நகரசபை மாநகராட்சியாக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
    குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பற்றி பேசினார். மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும். 3 மாதத்துக்கு ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதுதவிர உள்ளூர் பிரச்சினைகளையும் மக்கள் முன் வைத்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் கூறினார்.

    குமரி மாவட்டத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகள் ஆக்கப்படுவதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும். ஓட்டை உடைசல் அரசு பஸ்கள் மாற்றப்படும்.

    தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பத்மநாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், பறக்கைபுத்தளம்தர்மபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.

    மீன்பிடி துறைமுக பணிகள் செயல்படுத்தப்படும். கடலில் காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்கும் வகையில் ஹெலிகாப்டர்தளம் அமைக்கப்படும்.

    குளச்சல் வர்த்தக துறைமுக பணிகள் தொடங்கப்படும். தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

    நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக்கப்படும். தெங்கம்புதூரில் போலீஸ் நிலையம் அமைக்கப்படும்.

    இவை எல்லாம் நிறைவேற நீங்கள் தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×