search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் பிரசாரம்
    X

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் பிரசாரம்

    தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
    நெல்லை :

    தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே 16–ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு இரவு 8.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் வள்ளியூரில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 9.30 மணிக்கு நாங்குநேரியில் திறந்தவேனில் நின்று பேசுகிறார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். ஆறுமுகநேரி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கும் அவர் மறுநாள் (25–ந்தேதி) தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    அன்று மாலை 3 மணிக்கு திருச்செந்தூர் தேரடித் திடலிலும், மாலை 4.30மணிக்கு பழையகாயல் பஜாரிலும், மாலை 5மணிக்கு தூத்துக்குடி அண்ணாநகரிலும், மாலை 6மணிக்கு ஓட்டப்பிடாரம் பஜாரிலும் திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி கூட்டணிக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு எட்டயபுரம் பஜாரிலும், இரவு 8.30மணிக்கு கோவில்பட்டியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பின்னர் இரவு தாழையூத்து விருந்தினர் மாளிகையில் அவர் தங்குகிறார். 26–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு நெல்லை சந்திப்பில் பிரசாரத்தை தொடங்குகிறார். 3.30 மணிக்கு பாளையிலும், 4 மணிக்கு மேலப்பாளையத்திலும் வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து 5 மணிக்கு அம்பையிலும், 6 மணிக்கு கடையத்திலும், 7 மணிக்கு தென்காசியிலும், 8 மணிக்கு கடையநல்லூரிலும், 9 மணிக்கு சங்கரன்கோவிலிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    Next Story
    ×