என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக தடகள சாம்பியன்ஷிப்: 20 கி.மீ. நடை பந்தயத்தில் ஸ்பெயின் வீராங்கனைக்கு தங்கம்
    X

    உலக தடகள சாம்பியன்ஷிப்: 20 கி.மீ. நடை பந்தயத்தில் ஸ்பெயின் வீராங்கனைக்கு தங்கம்

    • 41 வீராங்கனைகள் பந்தயத்தில் முழுவதுமாக கடந்தனர்.
    • 8 வீராங்கனைகள் பாதியில் விலகியும், தகுதி நீக்கமும் செய்யப்பட்டனர்.

    டோக்கியோ:

    20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    போட்டியின் 8-வது நாளான இன்று காலை பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நடைபெற்றது. இதில் 49 பேர் பங்கேற்றனர்.

    ஸ்பெயின் வீராங்கனை மரியா பெரேஸ் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 25.54 நிமிடத்தில் கடந்தார். மெக்சிகோவை சேர்ந்த அலெக்னா கோன் சாலஸ் 1 மணி 26.06 நிமிடத்தில் கடந்து வெள்ளிப்பதக்கமும், நானாகோ புஜி (ஜப்பான்) 1 மணி 26.18 நிமிடத்தில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    41 வீராங்கனைகள் பந்தயத்தில் முழுவதுமாக கடந்தனர். 8 வீராங்கனைகள் பாதியில் விலகியும், தகுதி நீக்கமும் செய்யப்பட்டனர்.

    ஆண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் பிரேசில் வீரர் கெயோ பான்பிம் தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 18.35 நிமிடத்தில் கடந்தார்.

    சீனாவை சேர்ந்த ஹார்வோவாங் 1 மணி 18.43 நிமிடத்தில் கடந்து வெள்ளி பதக்கமும், பால் மெக்ராத் (ஸ்பெயின்) 1 மணி 18.45 நிமிடத்தில் கடந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    Next Story
    ×