என் மலர்
விளையாட்டு

பேஸ்பால் போட்டியின் இடையே 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம்- டொரண்டோ மைதானத்தில் உற்சாகம்
- டொரண்டோவில் பேஸ்பால் போட்டி நடைபெற்று வருகிறது.
- இதில் ஒரு போட்டியின் இடையே நாட்டு நாட்டு பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
டைரக்டர் ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை பெற்றது. நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து ஆடிய இந்த பாடல் உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த பாடலுக்காக பல்வேறு நாடுகளில் தூதர்கள் மற்றும் பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தன.
இந்நிலையில் டொரண்டோவில் பேஸ்பால் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு போட்டியின் இடையே நாட்டு நாட்டு பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு மைதானத்தில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் நடன கலைஞர்கள் மாஸ்கட் உருவம் அணிந்த பொம்மைகளை அணிந்து நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Next Story






