என் மலர்
டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்
- ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சகநாட்டவரான எம்மா நவரோ உடன் மோதினார்.
- முதல் செட்டை பெகுலா இழந்தார்.
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சகநாட்டவரான எம்மா நவரோ உடன் மோதினார்.
இந்த மோதலில் முதல் செட்டை பெகுலா இழந்தார். இதனையடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய ஜெசிகா பெகுலா அடுத்த 2 செட்டையும் கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-7 (2-7), 6-2, 6-1 என்ற செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி பெகுலா அரையிறுதிக்கு முன்னேறினார்.
Next Story






