என் மலர்
டென்னிஸ்

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா ஜோடி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
- போலினா-மரியா ஜோடி விலகியதால் இந்திய ஜோடி அரை இறுதி வாய்ப்பை பெற்றது.
- இரட்டையிர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா ஜோடி அரை இறுதியில் இந்தோனேசியாவுடன் ஜேனிஸ் டிஜென்-அல்டிலா ஜோடியை சந்திக்கிறது.
சென்னை:
2-வது சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் (டபிள்யூ.டி.ஏ.250 ) போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த கால் இறுதி ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள ஜேனிஸ் டிஜென் ( இந்தோனேசியா), 7-ம் நிலை வீராங்கனையான கிம்பெர்லி பிரெல் (ஆஸ்திரேலியா) , ஜோர்னா கார்லேண்ட் ( சீன தைபே), லான்லானா தராருடீ (தாய்லாந்து) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா போசலே ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. போலினா-மரியா ஜோடி விலகியதால் இந்திய ஜோடி அரை இறுதி வாய்ப்பை பெற்றது.
மற்றொரு இந்திய ஜோடியான மாயா-வைஷ்ணவி ஜோடி கால் இறுதியில் தோற்றது. முதல் வரிசையில் இருக்கும் ஸ்டார்ம் ஹண்டர் (ஆஸ்திரேலியா)-மோனிகா (ருமேனியா) ஜோடி 6-2, 6-1 என்ற கணக்கில் டாட்டியானா-யஷினா ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இன்று மாலை நடைபெறும் ஒற்றையர் அரை இறுதி ஆட்டங்களில் லான்லானை தராருட்-ஜேனிஸ் டிஜென், கிம்பெர்லி-ஜோர்னா கார்லேணட் மோதுகிறார்கள்.
இரட்டையிர் பிரிவில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா ஜோடி அரை இறுதியில் இந்தோனேசியாவுடன் ஜேனிஸ் டிஜென்-அல்டிலா ஜோடியை சந்திக்கிறது.






