என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5-வது முறையாக பதக்கம் வென்ற சுனில் குமார்
    X

    ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5-வது முறையாக பதக்கம் வென்ற சுனில் குமார்

    • வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சுனில் குமாருடன் சீனாவின் ஜியாக்சின் ஹுவாங் மோதினார்.
    • ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5-வது முறையாக சுனில் குமார் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி ஜோர்டன் நாட்டில் உள்ள அம்மான் நகரில் நடந்து வருகிறது. இதில் 87 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    87 கிலோ பிரிவில் காலிறுதியில் தஜிகிஸ்தானின் சுக்ரோப் அப்துல்கயேவை 10-1 என்ற கணக்கில் சுனில் குமார் வீழ்த்தினார். அரையிறுதியில் ஈரானின் யாசின் யாஸ்டியிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

    இதனையடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஜியாக்சின் ஹுவாங்கை எதிர் கொண்டார். இதில் சீனாவின் ஜியாக்சின் ஹுவாங்கை வீழ்த்தி சுனில் குமார் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

    இதன்மூலம் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5-வது முறையாக சுனில் குமார் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×