என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு

சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டி: தமிழக நீச்சல் வீரருக்கு வெள்ளி பதக்கம்

- சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் நேற்று வரை இந்தியா 15 தங்கம், 27 வெள்ளி, 13 வெண்கலம் என 55 பதக்கங்களை வென்றது.
- தடகளம், நீச்சல், சைக்கிளிங், வலு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுகளில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.
பெர்லின்:
திறன் குறைபாடு உடையோருக்கான சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலக கோடைகால விளையாட்டு போட்டி ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து 198 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் (லெவல் ஏ) பிரிவில் தமிழக வீரர் தினேஷ்குமார் (வயது22) வெள்ளி பதக்கம் வென்றார்.
சென்னையை சேர்ந்த தினேஷ் குமார், சென்னை ஜெயின் கல்லூரியில் பி.எஸ்.சி காட்சித் தொடர்பியல் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். பேச்சு திறன் மற்றும் கற்றல் குறைபாடு உடைய தினேஷ்குமார், பெற்றோர் ஆதரவுடன் நீச்சலில் முன்னேறி வருகிறார். சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான பிரியோ விளையாட்டு அகாடமியை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் சதீஷின் வழிகாட்டுதலுடன் தினேஷ்குமார் சாதித்துள்ளார்.
சிறப்பு ஒலிம்பிக்ஸ் போட்டியில் நேற்று வரை இந்தியா 15 தங்கம், 27 வெள்ளி, 13 வெண்கலம் என 55 பதக்கங்களை வென்றது. தடகளம், நீச்சல், சைக்கிளிங், வலு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுகளில் பதக்கங்கள் வென்றுள்ளனர்.