என் மலர்
விளையாட்டு

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமனம்
- 4.5 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய ஆற்றல் மற்றும் தெளிவான தொலைநோக்குடன் திரும்புகிறேன்.
- ஸ்ஜோர்ட் மரிஜ்னே ஜனவரி 14-ம் தேதி இந்தியா வருகிறார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்ஜோர்ட் மரிஜ்னே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா இன்று அறிவித்துள்ளது.
மேலும் துணை பயிற்சியாளர்கள் டாக்டர் வெய்ன் லோம்பார்ட் (விஞ்ஞான ஆலோசகர், டோக்கியோ ஒலிம்பிக் அணியின் உறுப்பினர்) மற்றும் மாடியாஸ் விலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர் ஜனவரி 14-ம் தேதி இந்தியா வருவார். அதே நேரத்தில் தேசிய பயிற்சி முகாம் ஜனவரி 19-ம் தேதி பெங்களூருவில் உள்ள SAI-யில் தொடங்குகிறது.
அவரது முதல் தொடராக மார்ச் 8 முதல் 14, வரை ஐதராபாத்தில் நடைபெறும் FIH பெண்கள் ஹாக்கி உலக கோப்பை தகுதி சுற்று இருக்கும்.
பயிற்சியாளர் நியமனம் குறித்து மரிஜ்னே கூறுகையில், "4.5 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய ஆற்றல் மற்றும் தெளிவான தொலைநோக்குடன் திரும்புகிறேன். அணியின் வளர்ச்சியை ஆதரித்து, வீரர்கள் தங்கள் முழு திறனை உலக அரங்கில் அடைய உதவுவேன்" என்றார்.
இவர் பயிற்சியாளராக இருந்த காலத்தில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் அணி 4-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.






