search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? அரியானாவுடன் இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியை பெறுமா? அரியானாவுடன் இன்று மோதல்

    • தமிழ் தலைவாஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது.
    • தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பெங்களூரு, புனே, சென்னை, நெய்டா, மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்றது.

    7-வது கட்ட போட்டிகள் ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடந்த ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 36-34 என்ற கணக்கில் புனேரி பல்தானையும், பெங்கால் வாரியர்ஸ் 42-37 என்ற கணக்கில் உ.பி. யோதாவையும் தோற்கடித்தன.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 8 தோல்வியுடன் 19 புள்ளிகள் பெற்று 11-வது இடத்தில் இருக்கிறது. தமிழ் தலைவாஸ் அணி தனது 12-வது ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்சை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்கிறது.

    தமிழ் தலைவாஸ் அணி அரியானாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏற்பட்ட தோல்விக்கு இந்த அணி பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த அணி டெல்லி (42-31), தெலுங்கு டைட்டன்ஸ் (38-36), உ.பி.யோதா (46-27) ஆகியவற்றை தோற் கடித்து இருந்தது.

    பெங்கால் வாரியர்ஸ், மும்பை, பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர், அரியானா, குஜராத் ஜெய்ன்ட்ஸ், பெங்களூர் புல்ஸ், புனே ஆகியவற்றிடம் தோற்று இருந்தது. அரியானா அணி தமிழ் தலைவாசை வீழ்த்தி 7-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி-பாட்னா அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி 8-வது வெற்றிக்காகவும், பாட்னா 6-வது வெற்றிக் காகவும் காத்திருக்கின்றன. இதுவரை 70 ஆட்டங்கள் முடிந்துள்ளன. புனே அணி 10 வெற்றி, 2 தோல்வியுடன் 52 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

    ஜெய்ப்பூர் 48 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டெல்லி 40 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குஜராத் 39 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், மும்பை 35 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், அரியானா 34 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன.

    பெங்கால், பெங்களூரு, பாட்னா, உ.பி. யோதா, தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 7 முதல் 12-வது இடங்களில் உள்ளன.

    Next Story
    ×