என் மலர்
விளையாட்டு

தேசிய வாள்வீச்சு போட்டி- தமிழக அணிகள் அறிவிப்பு
- இந்தப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் அறிவித்தனர்.
- 17-வது தேசிய கேடட் ( 19 வயதுக்குட்பட்டோர்) வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடக்கிறது.
சென்னை:
17-வது தேசிய கேடட் ( 19 வயதுக்குட்பட்டோர்) வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடக்கிறது.
இந்தப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் வி.கருணாமூர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தமிழக அணி வருமாறு:-
ஆண்கள்: அரவிந்த், பெனிசியர் , ஸ்டார்வின் டாமின் ரிஷோ , ரேன்டி ஆர்டன் , டாமின்ரிடோ ( அனைவரும் கன்னியாகுமரி), வி.சந்தோஷ் மாரிஸ்வரன், கவின், எம் . சந்தோஷ், ராமமூர்த்தி (ராமநாதபுரம் ) விஜய் பரத் ( சேலம் )
பெண்கள்: ஜெனிஷா, ஜெபர்லின் ( கன்னியாகுமரி), ஜாய்ஸ் அஷிதா, ஜனனி, சசி பிரபா, தரணி (சென்னை), பிரீத்தி வர்ஷினி, புவனேஸ்வரி (கிருஷ்ணகிரி), வர்ஷினி, மனிகா சூர்யா ( நெல்லை), ஜெமிலியா ( நாமக்கல்), ஏஞ்சலின் ஓவியா ( சேலம்)






