என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்தியா- பெல்ஜியம் இன்று மோதல்
    X

    ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: காலிறுதியில் இந்தியா- பெல்ஜியம் இன்று மோதல்

    • சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
    • லீக் சுற்றில் 3 ஆட்டத்திலும் வென்று இந்தியா 29 கோல்கள் அடித்து சாதித்தது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது.

    2 முறை சாம்பியனான இந்தியா , 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

    ரோகித் தலைமையிலான இந்திய அணி பெல்ஜியத்தை தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    லீக் சுற்றில் 3 ஆட்டத்திலும் வென்று இந்தியா 29 கோல்கள் அடித்து சாதித்தது. அதே நேரத்தில் கோல் எதுவும் வாங்கவில்லை. சிலிக்கு எதிராக 7-0 என்ற கோல் கணக்கிலும், ஓமனுடனான போட்டியில் 17-0 என்ற கோல் கணக்கிலும், சுவிட்சர்லாந்தை 5-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. இதனால் பெல்ஜியத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    பெல்ஜியம் அணி லீக் சுற்றில் ஸ்பெயினிடம் தோற்று இருந்தது . நமீபியா, எகிப்தை வென்று இருந்தது. 22 கோல்கள் அடித்துள்ள அந்த அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும்.

    இன்று நடைபெறும் மற்ற கால்இறுதி போட்டிகளில் ஸ்பெயின்- நியூசிலாந்து, ஜெர்மனி-பிரான்ஸ் , நெதர்லாந்து-அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×