என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரா ஒலிம்பிக்கில் 18 பதக்கங்களை வென்ற இந்தியா
    X

    பாரா ஒலிம்பிக்கில் 18 பதக்கங்களை வென்ற இந்தியா

    • இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
    • இந்திய வீரர் சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் அஜித் சிங் 65.62 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    Next Story
    ×