என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ்- பெங்கால் அணிகள் இன்று மோதல்
    X

    ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ்- பெங்கால் அணிகள் இன்று மோதல்

    • பிளே ஆப் சுற்று வாய்பில் நீடிக்க தமிழ்நாடு அணி வெற்றி பெறுவது அவசியமானது.
    • அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    ராஞ்சி:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது ஹாக்கி இந்தியா லீக்கின் 2-வது கட்ட போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது

    சென்னையை மையமாக கொண்ட அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் ஐதராபாத் டூபான்சையும், 2-வது ஆட்டத்தில் சூர்மா ஹாக்கி கிளப்பையும், 3-வது போட்டியில் எஸ்.ஜி.பை பர்சையும் வீழ்த்தி இருந்தது.

    நேற்றைய போட்டியில் அந்த அணி 2-4 என்ற கோல் கணக்கில் எச். ஐ.எல். ஜி.சி.யிடம் வீழ்ந்து முதல் தோல்வியை தழுவியது . தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்காக பிளேக் கோவர்ஸ் (32-வது நிமிடம்), உத்தம் சிங் ( 56) ஆகியோர் கோல் அடித்தனர். எச்.ஐ. எல்.ஜி.சி. தரப்பில் கானே ரஸ்ஸல் 3 கோலும் (14,33 மற்றும் 47-வது நிமிடங்கள்), சாம் வார்டு ஒரு கோலும் (23) பதிவு செய்தனர்.

    அமித் ரோகித் தாஸ் தலைமையிலான தமிழ்நாடு டிராகன்ஸ் 5-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்கால் டைகர்சை இன்று இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணி பெங்கால் டைகர்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பிளே ஆப் சுற்று வாய்பில் நீடிக்க வெற்றி பெறுவது அவசியமானது. இதனால் தமிழ்நாடு டிராகன்ஸ் வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள்.

    பெங்கால் டைகர்ஸ் 1 வெற்றி, 3 தோல்வியுடன் 1 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    Next Story
    ×