என் மலர்
விளையாட்டு

காது கேளாதோர் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனைக்கு தங்கம்
- காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
- உக்ரைன் வீராங்கனை மொசினா ஹலினா (32 புள்ளி) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
டோக்கியோ:
காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பிராஞ்சலி பிராஷந்த் துமால் 34 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
உக்ரைன் வீராங்கனை மொசினா ஹலினா (32 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், ஜியோன் ஜிவோன் (30 புள்ளி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். முன்னதாக தகுதி சுற்றில் பிராஞ்சலி 600-க்கு 573 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்தார். நடப்பு தொடரில் பிராஞ்சலி வென்ற 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் தங்கமும், ஏர் பிஸ்டலில் வெள்ளியும் வென்று இருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை அனுயா பிரசாத் 4-வது இடம் பெற்றார். இந்த போட்டி தொடரில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இதுவரை 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்றுள்ளது.






