என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தமிழ்நாட்டுக்காக விளையாடபோவதில்லை.. திரிபுரா அணிக்கு விளையாடும் விஜய் சங்கர்
- தமிழ்நாட்டில் நடந்து வரும் புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார்.
- இதனால் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேற விஜய் சங்கர் முடிவு எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து வரும் புச்சிபாபு கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியில் இருந்து விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேற விஜய் சங்கர் முடிவு எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனை டிஎன்சிஏவும் உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு அணியுடனான அவரது 13 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது.
கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியின் தொடக்க பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. இது புச்சிபாபு தொடரிலும் பின்பற்றப்பட்ட நிலையில், 34 வயதாகும் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேறி திரிபுரா அணிக்காக விளையாட முடிவு எடுத்துள்ளார். ஆந்திர பிரதேச அணிக்காக ஆடி வந்த ஹனுமா விஹாரி, தற்போது திரிபுரா அணிக்காக விளையாட உள்ளார்.
தமிழ்நாடு அணிக்காக 70 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள விஜய் சங்கர் 3,702 ரன்களையும், 43 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் கேப்டனாக விஜய் ஹசாரே, தியோதர் டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களையும் தமிழ்நாடு அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு பாபா அபரஜித்தும் தமிழ்நாடு அணியில் இருந்து விலகி, கேரளா அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






