என் மலர்
கிரிக்கெட் (Cricket)

3வது போட்டியில் வெற்றி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது பாகிஸ்தான்
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 139 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லாகூர்:
பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாபர் அசாம் 47 பந்தில் 68 ரன் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது பாபர் அசாமுக்கும், தொடர் நாயகன் விருது பஹீம் அஷ்ரப்புக்கும் வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 4-ம் தேதி பைசலாபாத்தில் நடக்கிறது.






