என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20: இங்கிலாந்து 153 ரன்கள் எடுத்த நிலையில் கைவிடப்பட்ட போட்டி
    X

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20: இங்கிலாந்து 153 ரன்கள் எடுத்த நிலையில் கைவிடப்பட்ட போட்டி

    • பில் சால்ட் (3), பட்லர் (29), ஜேக்கப் பெத்தேல் (15), ஹாரி ப்ரூக் (20) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
    • சாம் கர்ரன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் சேர்த்தார்.

    இங்கிலாந்து அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுவதற்கான இங்கிலாந்து சென்றுள்ளது.

    முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. பில் சால்ட் (3), பட்லர் (29), ஜேக்கப் பெத்தேல் (15), ஹாரி ப்ரூக் (20) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    சாம் கர்ரன் ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 49 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

    பின்னர் நியூசிலாந்து பேட்டிங் செய்ய இருந்தது. திடீரென கனமழை பெய்தது. மழை நிற்க நீண்ட நேரம் ஆனது. பின்னர் மைதானம் விளையாட முடியாத வகையில் சேதம் அடைந்திருந்ததால், போட்டி கைவிடப்படுவதாக நடுவர் அறிவித்தார். இதனால் முதல் போட்டி வெற்றித் தோல்வியின்றி கைவிடப்பட்டது. 2ஆவது போட்டி நாளைமறுதினம் இதேமைதானத்தில் நடக்கிறது.

    Next Story
    ×